Facebook பக்கப் பெயர்களுக்கான வழிகாட்டிகள்
இணைப்பை நகலெடு
பக்கத்தின் பெயர்கள் துல்லியமாக பக்கத்தைப் பிரதிபலிக்க வேண்டும் மற்றும் எங்களின் பெயரிடுதல் வழிகாட்டிகளைப் பின்பற்ற வேண்டும். பிராண்டு, இடம், நிறுவனம் அல்லது பிரபலத்தின் பக்கத்தை அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே நிர்வகிக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
பக்கத்தின் பெயருக்கான சிறந்த நடைமுறைகள்
உங்கள் பக்கத்தின் நோக்கத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் பக்கத்தின் பெயர்களை எளிமையாகவும், குறிப்பாகவும் இலக்கணப் பிழையின்றி வைத்திடுங்கள். எடுத்துக்காட்டாக, ஹங்கரி பியர் காஃபி, ஆல்ஸ்டார் லாக்ஸ்மித் அல்லது கேரிங் ஹார்ட்ஸ் டேகேர்.
பக்கத்தின் பெயர்களில் இருக்கக்கூடாதவை
பக்கத்தின் பெயர்கள் பின்வரும் விஷயங்களை மட்டும் கொண்டிருக்கக் கூடாது
- ஒற்றை, பொதுவான சொல் (எடுத்துக்காட்டு: பீட்ஸா). பக்கங்கள் அவற்றின் தலைப்புகள் சார்ந்த அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டும். எனவே பக்கத்தின் பெயர்கள் மிகவும் விரிவானதாக இருப்பதைத் தவிர்க்கவும்.
- பொதுவான புவியியல் இடங்கள் (எடுத்துக்காட்டு: நியூயார்க்). இருப்பினும், புவியியல் இடத்தைக் குறிக்கும் வகையில் நிறுவனத்திற்குப் பக்கப் பெயரை நீங்கள் உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக "நியு யார்க் நகரம் – மேயரின் அலுவலகம்" மற்றும் "கிரேட் பிரிட்டன் ராணி II எலிசபெத்" ஆகியவை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்கப் பெயர்களாகும். பக்கம் எதைப் பற்றியது என்பதை அந்தப் பெயர் துல்லியமாகக் காட்டும் வரையில் நிறுவனத்தின் பெயரிலிருந்து வேறுபட்ட பெயரையும் நீங்கள் பயன்படுத்தலாம் (எடுத்துக்காட்டு: "அயர்லாந்து சுற்றுலா" என்பதில் "அயர்லாந்தைக் கண்டறிந்திடுங்கள்" என்ற பெயர் இருக்கலாம்).
உங்கள் பக்கத்தின் பெயரை மாற்றுவதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்கும் விதம் பற்றி அறிக.
Other ways to get help
Chat with Meta AI support assistant
Resolve issues, make changes and get support in real time
